கிளிநொச்சியில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று மாலை 3 மணியளவில் அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களிற்கு இன்று நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களிற்கும் குண்டசாலை பகுதியில் கரந்தகொல்ல என்ற இடத்தில் 2 வருடங்களிற்கு வேதனத்துடனான பயிற்சி இடம்பெறவுள்ளதாகவும் இதன் போது முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

போரினால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ள பிரதேசத்தை வழங்கொழிக்கும் ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கும், பசுமை நிறைந்த ஒரு பூமியாக மாற்றுவதற்கும் ஒன்றிணையுமாறு போது மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிட தக்கதாகும்.

You might also like