நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் சிக்கலினால் ஒரு மணித்தியால மின்சார தடை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் ஒரு மணித்தியால மின்சார தடை ஏற்படும் என மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வழங்கப்படும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளமையினால் எம்பிலிப்பிட்டிய மற்றும் கெரவலபிட்டிய மின்சக்தி நிலையங்களின் நடவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்சக்தி கட்டமைப்புகளை சமமான நிலையில் நடத்தி செல்வதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரண்டு மின்நிலையங்களுக்கும் 400 மெகாவேட்ஸ் கொள்ளளவு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்திற்குள் எரிபொருள் வழங்கப்படவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் டிசல் நிலையங்களின் பணிகளும் இடைநிறுத்த நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

You might also like