உடன் தீர்வு கிடைக்காவிட்டால் பணிப் பகிஷ்கரிப்புத் தொடரும்! வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை

தாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் பற்றிய உரிய பதில் அரசிடமிருந்துவிரைவில் கிடைக்காவிட்டால் தங்களது பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்ந்துநடக்கும் என்று இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தங்களது சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு கொழும்பிலேயே இருப்பதால் அரசுதனது பதிலை உடனடியாகத் தெரிவிப்பதில் எவ்வித இடையூறும் கிடையாது எனஅச்சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நவீன் டீ சொய்சா தெரிவித்துள்ளார்.

சைட்டம் முதலாளித்துவத்துக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டு தனது பிடிவாதத்தைத்தொடரும் அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாசெலவில் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் தயாரித்துகாட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றது.

இவை அனைத்தும் அப்பாவிப் பொதுமக்களின்பணத்திலேயே செய்யப்படுகின்றது என்பதை அரசும் அதிகாரிகளும்புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like