நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருட மஹோற்சவப் பெருந்திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏவிளம்பி வருட மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை மறுதினம் (28) முற்பகல் 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்குகார்த்திகை உற்சவமும் நடைபெறவுள்ளது.

மேலும்,16 ஆம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும், 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ஆம் திருவிழாவான 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21 ஆம் திகதி காலை 07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

 

You might also like