முல்லைத்தீவு சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை

முல்லைத்தீவு – கொண்டைமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் ஒன்றை முள்ளியவளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்தை இன்று பிற்பகல் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 40 லீட்டர் கசிப்பும் 4 பரல் கசிப்புக்கோடா உள்ளிட்ட சட்டவிரோத மது உற்பத்திப் பொருட்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் முள்ளியவளை பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

You might also like