யாழில் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்! சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழுவொன்று மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் அதிகாரி வீடு திரும்பும் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையிலேயே, தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் நபர்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like