வாராந்தம் 8 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல்

வாராந்தம் 8 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக தேசிய டெங்கு நோய்கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளரான மருத்துவர் நிமல்கா பன்னில தந்ரி தகவல் வெளியிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு நோய் தொடர்பான மாநாடொன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 300 பேர் இறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் 44 சதவீத டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 65 பேர் மரணித்துள்ளனர்.

இந்த நிலையில், 41 சுகாதார அதிகாரிகள் பிரிவு அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளரான மருத்துவர் நிமல்கா பன்னில தந்ரி தகவல் வெளியிட்டுள்ளார்.

You might also like