அதி முக்கிய பிரபு ஒருவரின் மகன் டுபாய் வங்கியில் 272 பில்லியன் பணத்தை வைப்புச் செய்துள்ளார்?

கடந்த அரசாங்கத்தின் அதி முக்கிய பிரபு ஒருவரின் மகன் டுபாய் வங்கியொன்றில் 272 பில்லியன் ரூபா பணத்தை வைப்புச் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இவ்வளவு பாரிய தொகைப் பணம் டுபாய் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த பணம் இலங்கையின் வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை ஈடு செய்யப் போதுமானது என நிதி மோசடி விசாரணைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வளவு பாரிய தொகைப் பணத்தை எவ்வாறு குறித்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பாதித்தார் என்பது பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்த வங்கிக் கணக்கு குறித்து விசாரணை நடத்த பொலிஸார், டுபாய் வங்கிக்கு சென்று தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

மோசடியான கொடுக்கல் வாங்கல்ளின் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்புச் செய்யப்பட்ட 84 சம்பவங்கள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 39 சம்பவங்களுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி மோசடிப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like