வவுனியாவில் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா விபுலானந்த கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (28.07.2017) காலை 7.30 மணிமுதல் 9.30மணி வரை  பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இச் சிரமதானத்தில் பங்கேற்றிருந்தனர்.

டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வரும் இச் சிரமதானப்பணி 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில் வட பகுதி பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்றுவரும் நிலையில் இச் சிரமதானம் மேற்கொள்ளப்படுவதனால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like