செட்டிகுளம் பொலிசார் முறைப்பாட்டினை ஏற்க மறுப்பு 70வயது முதியவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா செட்டிகுளத்திலுள்ள பொலிசார் 70வயது முதியவர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு மேற்கொள்ளச் சென்றபோது தன்னை 3தினங்களுக்கு அலைக்களித்துள்ளதுடன் தனது முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை  என்று தெரிவித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்கு 70வயது முதியவர் ஒருவர் தனது மருமகன் முறையான உறவினர் திருமணமாகி இரண்டு பிள்ளைகள், மனைவி, மாமியார் ஆகியோரை கடந்த 04.07.2017 தனது வீட்டை விட்டு விரட்டியுள்ளார். அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் இவ் முறைப்பாட்டினை பதிவு செய்வதற்குச் சென்றபோதே குறித்த முதியவரின் முறைப்பாட்டினை செட்டிகுளம்’ பொலிசார் ஏற்றுக்கொள்வில்லை.

மாறாக தனது உறவு முறையான மருமகன் பொலிசாரை தனது வலையில் சிக்கவைத்துவிட்டதாகவும் அதையடுத்தே பொலிசார் தனது முறைப்பாட்டினை எற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

You might also like