இரணைமடு குளத்தின் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணிகளில் விவசாயிகள்

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்ம

ட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் இணைந்து குளத்தின் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தி நீரை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் மு.சிவமோகன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நீர் பற்றாக்குறை காரணமாக குளத்தின் வாய்க்கால் பகுதி ஆழப்படுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயிகளும் நீர்ப்பாசன திணைக்களமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பணிக்காக அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என தெரிவித்த அவர், குறித்த பணிக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்தும், எவ்வளவு செலவு ஏற்படும் என்று இதுவரை கணிப்பிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like