தேசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவில் வடக்கு தமிழர்கள் மூவர் தெரிவு

தேசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவில் வடக்கைச் சேர்ந்த தமிழர் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தேசிய காற்பந்தாட்ட சம்மேளனத்தில் நிறைவேற்றுக் குழுத் தெரிவுகள் அண்மையில் கொழும்பில் நடைபெற்றிருந்தன. அதில் வடமராட்சி உதைப்பந்தாட்ட சங்கத் தலைவர் எஸ்.வேதாபரணம் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், புட்சால் மற்றும் பீச் உதைப்பந்தாட்ட குழுமத்தின் உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், வடமாகாண சபை உறுப்பினரும் யாழ் உதைப்பந்தாட்ட சங்க தலைவருமான இ.ஆர்னோல்ட் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் வடமாகாண உதைப்பந்தாட்ட அபிவிருத்திக் குழுமத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கச் செயலாளர் அ.நாகராஜன் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடக குழுமத்தின்  உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
You might also like