யாழில் கடன் சுமையால் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை

யாழ். கைத்தடிச் சந்தியில் வர்த்தகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் கடன் சுமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைத்தடியைச் சேர்ந்த எஸ். முருகையா(வயது-48) என்ற இரு பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கைத்தடிச் சந்தியில் மேற்படி வர்த்தகர் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகின்றார்.

வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாக குறித்த நபரின் வீடு அமைந்துள்ள நிலையில், வீட்டினுள் இன்று (28) காலை 8:30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த குடும்பத்தவர்கள் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like