யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற 18 வயது இளம் யுவதியைக் காணவில்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற 18 வயதான இளம் யுவதியை காணவில்லை என்று ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாம் வட்டாரம் வேலணைப் பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 08 மணிக்கு கூறிச் சென்ற யுவதி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் யுவதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊர்காவற்துறை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like