மனைவியை கட்டி வைத்து கடுமையாக தாக்கிய கணவன்: யாழில் நடந்த கொடூரம்

தென்மராட்சி மிருசுவில் மனைவியைக் கட்டி வைத்து கணவன் கொடூரமாக தாக்கியுள்ளார்.

விடத்தற்பளைப் பகுதியிலுள்ள வீடொன்றில் மனைவியைக் கட்டி வைத்து நேற்று இரவிரவாகத் கணவன் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயங்களுக்கு இலக்கான நிலையில் மரத்துடன் கட்டப்பட்டிருந்த பெண்ணை இன்று அதிகாலை அயலவர்கள் மீட்டுச் சென்று மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அங்கு வழங்கிய சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

You might also like