வவுனியா கல்வியற்கல்லூரியில் கல்லூரியின் பீடாதிபதி தலமையில் கலாச்சார நிகழ்வு

வவுனியா கல்வியல் கல்லூரியில் இன்று (28-07-2017) காலை 10.00மணிக்கு கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் கலாசார நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதமவிருந்தினரான இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் பாண்ட் வாத்தியங்களின் அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு கல்லூரி கீதத்துடன் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

தமிழ் கலாசார நடனங்கள் நடைபெற்றதுடன் இந்திய துணைத்தூதுவருக்கு கல்லூரி பீடாதிபதியினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்திய துணைத்தூவரால் ஒரு தொகுதி புத்தகங்கள் கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதனிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உப பீடாதிபதி பரமானந்தன், கல்வியல் கல்லூரி மாணவர்கள் ஆசியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like