கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரை இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை பிரதான வாயிலை மூடி, வகுப்புகளை பகிஷ்கரித்து இன்று (திங்கட்கிழமை) காலை இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பாடசாலையின் பல ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று சென்றுள்ள போதிலும், அவர்களுக்கு மாற்றீடான ஆசிரியர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் அதிபரையும் இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையானது கல்வித் தரத்தில் முன்னேறியுள்ள போதிலும், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுவதாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மாற்றீடாக தமக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்கும் வரை அதிபர் இடமாற்றத்தை கைவிடவேண்டுமென மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like