முல்லைத்தீவில் அன்னாசி அறுவடை வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் அன்னாசி அறுவடை வயல் விழா இன்று புதுக்குடியிருப்பு திம்பிலிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அன்னாசிப்பழங்களின் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பெ.அற்புதச்செல்வன், வட மாகாண பணிப்பாளர் சி.சிவகுமார் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பிரதி விவசாய பணிப்பாளர் பெ.அற்புதச்செல்வன் கூறுகையில், விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று.

மேலும், இதன் மூலம் பல விவசாயிகள் இந்த திட்டத்தினூடாக நன்மையடைந்துள்ளதுடன், ஊக்கமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

You might also like