வவுனியா கற்குழி ஞானம் முன்பள்ளியின் கண்காட்சி நிகழ்வு

வவுனியா கற்குழி ஞானம் முன் பள்ளியின் சிறார்களின் கண்காட்சி நிகழ்வு இன்று (28/07/2017) காலை 10.00மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளியின் ஆசிரியர் மற்றும் கிராம அபிவிருத்திக் குழு தலைவர் திரு அன்ரனி ரெக்ஸன் ஆகியோரின் தலமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் சிறீரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் திரு ப.கார்த்திக் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கெளரவ விருந்தினர்களாக சிறீரெலோ இளைஞரணி செயலாளர் திரு டினேஸ் மற்றும் வவுனியா வை.எம்.சி.ஏ தலைவர் திரு பாரதி ஆனந்தன்,கிராம அபிவிருத்தி குழு நிர்வாக உறுப்பினர் திரு சலசுலோசன் ஆகியோர் கலந்து  கொண்டு மலழைகளின் கண்காட்சி நிகழ்வை கண்டு களித்ததுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்தனர்

இதனை தொடர்ந்து முன் பள்ளியின் கட்டிடத்திற்கு சிறீரெலோ கட்சியின்ன் செயளாலர் நாயகம் ப.உதயராசா அவர்களினால் வழங்கப்பட்ட கூரைத்தகட்டை கார்த்திக் மற்றும் டினேஸ் அவர்களினால் கிராம அபிவிருத்திகுழு தலைவர் ரெக்ஸன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது

You might also like