வவுனியாவில் சிறப்புற நடைபெற்ற கரையேற மறுக்கும் ஓடங்கள் ஆடற்கலை நிகழ்வு

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று 28.07.2017 மாலை 4.00 மணியளவில் வவுனியாவில் கரையேற மறுக்கும் ஓடங்கள் ஆடற்கலை நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில்  கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், இ. இந்திரராசா, த. குருகுலராசா, ப. அரியரட்ணம், வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு. வீ. இராதாகிருஸ்ணன், கலாநிதி தமிழ்மணி அகளங்கன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வியற்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கரையேற மறுக்கும் ஓடங்கள் கீழத்தேய ஆடற்கலை ஆற்றுகையும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் அன்பளிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டது.

You might also like