யாழில் நீண்டநாட்களுக்குப் பின்னர் வானில் வட்டமிட்ட உலங்கு வானூர்தியால் பரபரப்பு

யாழில் நீண்ட நாட்களின் பின்னர்  வானில் தாழ்வாக வட்டமிட்ட உலங்கு வானுர்தியால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பலாலி இராணுவ விமான நிலையத்திலிருந்து  மேலெழுந்த குறித்த உலங்கு வானுர்தி சுமார் அரை மணித்தியாலங்களுக்கும் மேலாக வானில் தாழ்வாக வட்டமிட்டுள்ளது.

குறித்த உலங்கு வானுர்தி பல தடவைகள் யாழின் பல்வேறு பிரதேசங்களுக்கும் மேலாக வானில் வட்டமிட்ட பின்னர் மீண்டும் பலாலி இராணுவ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த உலங்கு வானுர்தி தாழ்வாகப் பல தடவைகள் வானில் வட்டமிட்டமை கடந்த யுத்தகாலத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like