வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்படும் மக்களுடன் கைகோர்த்த :வவுனியா மாவட்ட சாரணர் சங்கம்

இலங்கை சாரணர் சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையறிந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு தொகை குடிநீர் போத்தல்கள் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தில் நேற்று (28.07.2017) காலை 11.30மணியளவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தனராஜ் அவர்களிடம் கையளித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சர்வதேச சாரண ஆணையாளர் ஜனபிரித் பெர்னாண்டோ, மற்றும் மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர்களில் ஒருவரான ஆ.பொன்னையா, ஜனாதிபதி சாரணன் வ.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like