கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் இன்று மின்தடை : முழுமையான விபரங்கள்

கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளின் நிமித்தம் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில், இன்று  காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை கிளிநொச்சியிலும் மின்சார தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின், முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், முழங்காவில் கடற்படை முகாம், முழங்காவில் ஐஸ் தொழிற்சாலை, வெள்ளாங்குளம் 651 ஆவது பிரிகேட் இராணுவ முகாம், பல்லவராயன் கட்டு, கிராஞ்சி, வேராவில், வலைப்பாடு, குமுழமுனை ஆகிய பிரதேசங்ககளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

You might also like