வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை : மகிழ்ச்சியில் மக்கள்

நீண்ட வறட்சிக்குப் பின்னர் வவுனியாவில் இன்று (28.07..2017) மதியம் 12.15மணி தொடக்கம் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

வவுனியாவில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்ததோடு குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (28.07.2017) வவுனியாவில் பல பகுதிகளில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் சந்தோசத்தில் உள்ளனர்.

இடி, முழக்கத்துடன் பெய்த மழையினால் வீதியோரங்கள், பள்ளமான பகுதிகளில் நீர் வழிந்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது. 

நீண்ட கால வறட்சிக்கு பின்னர், இங்கு இவ்வாறு  மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like