யாழில் நடந்த விபரீதம் : கணவன் முன்னிலையில் குடும்பப்பெண் தற்கொலை

யாழ். மாதகல் பகுதியில் இளம் குடும்பப்பெண் ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மாதகல் மேற்குப் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் சாலினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

நிரஞ்சன் – சாலினி ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் முடித்துள்ளதுடன், சில வருடங்களில் தொழில் நிமிர்த்தம் நிரஞ்சன் வெளிநாடு சென்றிருந்தார்.

வெளிநாடு சென்ற கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த பல நாட்களாகத் தொலைபேசியில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இருவரும் தொலைபேசியில் உரையாடிய போது, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியுள்ளதாகவும் இதனால் மனமுடைந்த மனைவி வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தூக்கிட்டு தற்கொலை செய்வதை கணவர் நேரடியாகக் காணொளியூடாக பார்க்கும்படி செய்து விட்டு தூக்கிட்டுக் தற்கொலை செய்துள்ளார்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத கணவர் மாதகலில் தனது வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் பலசரக்குக் கடையொன்றை நடத்திவரும் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தையாருக்கு) தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் தந்தை வீட்டுக்குச் சென்று பார்த்த போது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற பொலிஸார், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like