சற்று முன் வவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம்

வவுனியா குருமன்காட்டு பகுதியில் இன்று (29.07.2017) மாலை 6.50மணியளவில் இரு மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் குருமன்காடு காளி கோவில் வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் ( சமிச்சை விளக்கு இல்லாமல்) அதே பாதையில் மன்னார் வீதியுடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளாதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கிலின் சாரதிகளும் காயமடைந்துள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like