அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத மதகு புனரமைக்கப்படுகிறது

கிளிநொச்சி அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருந்த மதகு ஒன்றை,  கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் புனரமைத்து வருகின்றது.

இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இந்தப் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அக்கராயன் தபாலகத்துக்குச் செல்லும் வீதி, நீண்ட காலமாக புனரமைக்கப்படாததன் காரணமாக, இவ்வழியாக கெங்காதரன் குடியிருப்புக்கும் அக்கராயன் குளத்துக்கும் செல்லும் மக்கள், போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், கரைச்சி பிரதேச செயலகம் எடுத்த முயற்சிகள் காரணமாக, தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

You might also like