ஐ.தே.க துவாரகேஸ்வரனை அடித்து மண்டபத்தை விட்டு துரத்திய மக்கள்

வித்தியா படுகொலையில் சுவிஸ் குமாரை ஐக்கிய தேசியக்கட்சி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தப்ப விட்டதாக குற்றம் சாட்டி புங்குடுதீவு மக்களால் இன்று புங்குடுதீவு சனசமூக நிலைய மண்டபத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவையும் மக்கள் அழைத்திருந்தனர்.

சுவிஸ் குமாரை பொலிஸார் ஏன் தப்பி செல்ல விட்டனர். சுவிஸ் குமாரை மக்கள் பிடித்து வைத்திருந்த போது அங்கு வந்த விஜயகலா மகேஸ்வரன் அங்கு வந்து ஏன் விடச்சொன்னார் என்ற கேள்விகளை ஆராய்வதற்காக இக் கூட்டத்தை மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சுவிஸ் குமாரை விஜயகலாவும் பொலிஸாரும் சேர்ந்து தப்பி செல்ல விட்டனர் என பொலிஸாருடன் மக்கள் முரண்பட்ட போது அங்கு தேவையில்லாமல் வந்து பொலிஸாருக்கு வக்காலத்து வாங்க முற்பட்ட துவாரகேஸ்வரனை மக்கள் அடித்து துரத்தினர். மண்டபத்தை விட்டு செல்லுமாறு மக்கள் அடித்து இழுத்து சென்று மண்டபத்திற்கு வெளியே துரத்தி விட்டனர்.

You might also like