முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் நீர்த்தட்டுப்பாடு: 6684 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் வட, கிழக்கில் வறட்சியான காலநிலை தொடருகின்றது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ புள்ளிவிபரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் கரைதுரைப்பற்று, புதுகுடியிருப்பு, ஒட்டுசுட்டான், துனுக்காய், மாந்தைகிழக்கு, மற்றும் மணலாறு ஆகிய பகுதிகளே இவ்வாறு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாந்தைகிழக்கு பகுதியில் 2126 குடும்பங்களை சேர்ந்த 6684 பேர் வறட்சியினால் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்னிவிளாங்குளம், கண்ணபிராங்குளம், கரும்புள்ளியான், நெட்டங்குளம், சிராட்டிக்குளம், செல்வபுரம், பாண்டியன்குளம், அம்பாள்குளம், உள்ளிட்ட பலபகுதிகளும் வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

You might also like