சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு?

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாயினால் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இரண்டு நிறுவனங்களும் அதன் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும் இது தொடர்பில் இன்னமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது எரிவாயு சிலிண்டர் ஒன்று 1320 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like