மரணத்திலும் பிரியாத தம்பதிகள்: விபத்தில் பலி

குருணாகல் – பன்னல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் – நீர்கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கஸ் சந்தியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் மோதுண்ட தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்று கிரியுல்லவிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த வான் வண்டியே மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

வான் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளன

You might also like