விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில் செயலமர்வு

வெளிச்சம் அறக்கட்டளையும் விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் 2006 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களும் இணைந்து வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த வ/விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த  தரம்  -5 இல் கல்வி கற்கும் 180 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் செயலமர்வு 30.07.2017 அன்று  விபுலானந்தாக் கல்லூரியில் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் திரு அ.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு S.சுரேந்தர் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சிவதர்சன் அவர்களும் ஆரம்ப பாடசாலை அதிபர் திரு. S. விவேகானந்தராஜா அவர்களும் பழைய மாணவர் சங்க உறுப்பினரான திரு. சு. காண்டீபன் அவர்களும் அபிவிருத்தி சங்க உறுப்பினர் திரு. ஐ.யோகநாதன் அவர்களும் 2006,2007,2008 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களும் மற்றும் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு. பா. லம்போதரனும்,  செயலாளர் திரு. தி.கார்த்திக், திரு. செ.மேனதாஸ் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

தலைமை உரையாற்றிய பாடசாலையின் அதிபர் அவர்கள் எமது பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கமும் வெளிச்சம் அறக்கட்டளையும் இணைந்து இவ்வாறான செயலமர்வினை நடாத்தியமை பெருமைக்குரிய செயற்பாடு என்றும் இதன் மூலம் இவ் மாணவர்களுடைய உயர்வு மட்டத்தை உயர்த்த முடியும் என்றும் இனி வரும் காலங்களில் இவர்களுடைய சேவைகள் எப்போதும் எமது பாடசாலைக்கு கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.தொடர்ந்து வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு. பா.லம்போதரன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், ஆரம்ப பிரிவு அதிபர் ஆகியோர் உரையாற்றினர். வளவாளர்களாக வவுனியா வடக்கு வலய ஆசிரிய ஆலோசகரான திரு. க. சந்திரகுமார் அவர்களும் ஆசிரியரான திரு. அ.சசிகுமார் ஆகியோரும் கடமையாற்றினர். அத்துடன் மாணவர்களுக்கு கையேடும் உணவுப் பொருட்களும்  வெளிச்சம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்டது.

You might also like