யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ். சரசாலைப் பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் (வயது 25) என்ற இளைஞரே  இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் கடந்த சில தினங்களாக தெல்லிப்பழைப் பிரதேசத்தில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழமை போன்று மேசன் வேலையில் குறித்த இளைஞர் ஈடுபட்டிருந்த போது  திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து மேற்படி இளைஞருடன் இணைந்து மேசன் வேளையில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளர்கள் குறித்த இளைஞரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like