முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இரண்டு கவனயீர்ப்பு பேரணிகள்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் இரண்டு கவனயீர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யுத்த காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்னால் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்வாறான போராட்டங்களுக்கு எந்தவித தீர்வும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், இன்றைய தினம் குறித்த போராட்டங்களுக்கு ஆதரவான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப்போராட்டத்தில் மெதடிஷ்த சபையினர், திருப்பணியாளர்களும் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like