முன்னாள் ஜனாதிபதியின் வளவுக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பரம்பரையினருக்கு சொந்தமான ஹொரகொல்ல வளவிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அத்தனகல்ல – ஹொரகொல்ல வளவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், வளவின் மதில் சுவருக்கு அருகில் உள்ள மலர் வேலிக்கு பக்கத்தில் இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரகொல்ல வளவில் பழைய நூலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில், டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த போது பொலித்தீன் பையில் போட்டப்பட்ட நிலையில் இருந்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.

பின்னர் இது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த கைக்குண்டை யார் எந்த காரணத்திற்காக இங்கு ஒழித்து வைத்திருந்தனர் என்பதை கண்டறிய நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பின்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்து கைக்குண்டை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரகொல்ல வளவு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பரம்பரையினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like