கிளிநொச்சியில் காணிகளை பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கும் கரைச்சி பிரதேச செயலக அதிகாரிகள்

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள மிகவும் பெறுமதி வாய்ந்த காணித்துண்டுகள் சிலவற்றை, கரைச்சி பிரதேச செயலகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலர், பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கி வருவதாக, அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

“குறிப்பாக, அக்கராயன்குளம் கரும்புத்தோட்டக் காணி, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணி, ஆனைவிழுந்தான் குளத்தின் கீழுள்ள வயல் காணிகள், கிளிநொச்சிக் குளத்தை அண்மித்த காணிகள் என்பன, அதிகாரிகள் துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

“இதேவேளை, கிளிநொச்சிக் குளத்தை அண்மித்த பகுதியில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு காணி உரிமங்களையோ அல்லது வீட்டுத்திட்டங்களையோ வழங்க இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

You might also like