கச்சாய் சிவத்தின் மலையக மக்கள் மீதான அவதூறின் பின்னணியில் சிறிதரன் எம் பி!! அதிர்ச்சி ரிப்போர்ட்

அண்மையில் ஜெர்மன் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்றழைக்கப்டும் சாவகச்சேரி கச்சாய் பகுதியை சேர்ந்த ஒரு நபர் மலையக தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாக வர்ணித்து ஒரு நேரலை காணொளியை தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டிருந்தமை அனைவரும் அறிந்தததே.

இது எதேச்சையாக நடைபெற்ற சம்பவமா? அல்லது இதன் பின்புலத்தில் அரசியல் பின்னணி உள்ளதா?

வழமையாக சர்ச்சைக்குரிய விதத்தில் நேரலை காணொளிகளை வெளியிடும் இந்த நபர் முதலில் மலையக தமிழரை பற்றி குறிப்பிட்ட விடயங்கள் அவரின் தனிப்பட்ட விடயம் போலவே தோற்றியது. ஆயினும் இதன் பின்னால் மறைந்துள்ள விடயங்களை நெற்றிக்கண் அலசிய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒரு தொலைபேசி உரையாடலில் மலையக மக்களை கீழ்த்தரமாக விளித்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சையை நினைவூட்டவேண்டிய தேவையுள்ளது.

குறித்த தொலைபேசி உரையாடலின் பதிவுசெய்யப்பட்ட பகுதி தன்னுடைய குரல்பதிவு இல்லை என சிறிதரன் எம் பி மறுத்ததும் இதன் பின்னர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒலி சேர்க்கை எந்திரவியலாளர் ஒருவர் அந்த பதிவு உண்மை என நிரூபிக்க போவதாக சவால் விட்டமையும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் பல தரப்புக்கள் சிறிதரன் எம்பி மீது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் இந்த பிரச்சனை பாரிய அளவில் பூதாகரமாக உருவெடுத்தது.
இந்த குரல் பதிவு பிரச்சனையின் தொடர்ச்சியே கச்சாய் சிவம் கூறியுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள்.
காரணம் என்ன ?

சிறிதரன் எம் பியின் விவகாரம் மலையக தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வடக்கு பிரதேச தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய உணர்வலைகளை தட்டியெழுப்பியது. இதை உடனடியாக திசை திருப்பவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட சிறிதரன் எம் பி உடனடியாக தெரிவு செய்த நபரே அவரின் உறவினராகிய கச்சாய் சிவம்.

கச்சாய் சிவத்தின் மலையக மக்கள் மீதான கருத்து சமுக வலைத்தளங்களில் பாரிய கருத்து மோதல்களை உண்டுபண்ணி வடக்கு தமிழர்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளியை உண்டுபண்ணியுள்ளது. இரண்டு பக்கமும் பரஸ்பரம் அவதூறுகளை அள்ளி இறைத்துவருவதை காணமுடிகிறது.
சிறிதரன் என்னும் அரசியல் பலம் பொருந்திய தனி ஒரு நபரால் விதைக்கப்பட்ட கருத்து இன்று ஒரு பிரதேச மக்களை உள்ளடக்கிய பொதுவான கருத்தாக விஸ்வரூபமெடுத்துள்ளது. இதன் மூலம் பிரச்சனை மக்கள் மயப்படுத்தப்பட்டு சிறிதரன் எம் பி தப்பிக்க முயன்றுள்ளார்.

இவ்வாறான இன முறுகலை ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பங்களையும் இவற்றின் பின்புலத்தில் உள்ளவர்களையும் பொது மக்கள் சரியாக அடையாளம் கண்டு செயல்ப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

நன்றி :- நெற்றிகண்

 

You might also like