கிளிநொச்சியில் விபத்து! சாரதி உட்பட நான்கு பேர் படுகாயம்

கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பக்கமாக தனியார் பேருந்து ஒன்றும் மகேந்திரா ரக பிக்கப் ஒன்றும் மோதுண்டதிலையே இவ்விபத்து இடம்பெறுள்ளது மகேந்திரா இரக வாகனத்தில் வந்தவர்களே  காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சாரதிக்கு  கை ஒன்று முறிவடைந்துள்ளதுடன் சில பலத்த காயங்களும் காணப்படுகின்றது  மற்றைய மூவரிற்கும் சில சிறிய காயங்களே காணப்படுவதாக அங்கிருந்து  கிடைக்கும்   தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து தொட்ஸ்ர்பில் மேலும் தெரியவருவதாவது,

டிப்போ சந்தியில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மிக வேகமாக  சென்றுகொண்டிருந்த மகேந்திரா ரக பிக்கப் திரேசா ஆலயத்திற்கு முன்பக்கமாக விதியினை துவிச்சக்கரவண்டி குறுக்கறுத்ததினால்   சடுதியாக நிறுத்த முற்ப்பட்ட போதே   குறித்த வாகனம் தூக்கி மறுபுறத்திற்கு வீசப்பட்டுள்ளது.

வீசப்பட்ட வாகனம்  டிப்போசந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த  பேருந்துடன் மோதுண்டுள்ளமை  அருகில் இருக்கும் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியில் பதிவாகி உள்ளது.

விபத்தில் சிக்கிய மகேந்திரா பிக்கப் கிளிநொச்சியில் உள்ள உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இன்று காலை தென்னிலங்கையை சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது குறித்த வாகனத்தினை வாங்கியவர்களும்  விற்றவர்களும் கரடிப்போக்கில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றிற்கு சென்று கொண்டிருக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

You might also like