இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்! காரணம் என்ன?

மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் கிழக்கு பகுதிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பின் போரத்தீவு, வளையிரவு பகுதிகளிலுள்ள காட்டுப் பகுதிகளிலும் ஆறு மற்றும் குளங்களை அண்டிய பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டு பறவைகள் இருப்பதாகவும், அங்குள்ள மீன்களை உண்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சைபீரியா போன்ற பகுதிகளில் ஏற்படும் கடும் குளிர் காரணமாக வெளிநாட்டு பறவைகள் இவ்வாறு நாட்டின் பல பகுதிகளுக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like