லஞ்சம் வாங்கிய சிப்பாயும் போதைப் பொருள் கடத்திய யுவதியும் கைது

கொழும்பு போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் சேவையாற்றும் 6 வது விஜயபா படைப் பிரிவின் சிப்பாய் ஒருவர் சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற போது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கமை தர்கா நகரில் சட்டவிரோத மதுபான வர்த்தகரிடம் சிப்பாய் இலஞ்சம் பெறும் போது லஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை உப்பு திணைக்களத்தின் முகாமையாளர் ஒருவரின் மகள் ஒருவர் மேலும் இரண்டு பேருடன் கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான யுவதியே மேலும் இரண்டு பேருடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 200 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலாஹேன பராக்கிரம மாவத்தை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த காரை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

You might also like