உயர்தர மற்றும் ஐந்தாம் தர பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை தொடர்பான சட்டங்கள் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, ஆயிரத்து 700 அதிகாரிகள் மேற்பார்வை பணியில் ஈடுபடவுள்ளார்கள் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like