2016 இறுதிக் காலாண்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 1,233 முறைப்பாடுகள்

2016ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுப் பகுதியில் மாத்திரம் இலங்கை மனித உரிமைகள் கிடைத்திருப்பதாக ஆணைக்குழுவின் 2016ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாவட்ட ரீதியாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் விவரங்கள்:

கண்டி 244, மாத்தறை 170, அநுராதபுரம் 141, மட்டக்களப்பு 80, யாழ்ப்பாணம் 73, கல்முனை 78, வவுனியா 79, அம்பாறை 56, பதுளை 55, திருகோணமலை 45, ஏனைய மாவட்டங்கள் 202.

இவற்றுள் 680 முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை அல்ல.

132 முறைப்பாடுகளின் மீதான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. இந்தக் காலாண்டுப் பகுதியில் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்ட மொத்தச் செலவு 67.9 மில்லியன் ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like