கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை : சுந்தரம் அருமைநாயகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில், மேலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனை என்பது, மாவட்டத்தில் மிக மோசமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனை தடுக்க நாம், நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும் கூட, சில தடைகள் காணப்படுகின்றன. இதற்கு, கிராம ரீதியில் மக்கள் ஒன்றுதிரண்டு, விழிப்புணர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

“சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், தாங்களாக உணர்ந்து திருந்திக் கொள்ளவேண்டும். சிறுவர்  துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறைகள் போன்ற செயற்பாடுகளுக்கு, சட்டவிரோத மதுப்பாவனையே முக்கிய காரணியாக உள்ளது.

“இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், அவற்றை நிறுத்தும் போது, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கத் தயாராகவே இருக்கின்றோம்” என்றார்.

You might also like