யாழில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸ் உறுப்பினர்களினதும் விடுமுறைகள் இரத்து

யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவையும் முன்னிட்டே பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் மற்றும் அண்மைக் காலமாகப் பொலிஸார் தாக்குதலுக்குள்ளாகின்ற சம்பவங்கள் காரணமாக யாழில் அசாதாரணமான நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பொலிஸ்மா அதிபர் நேற்றைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அங்கு பாதுகாப்பு நிலமைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தார்.

இந்த நிலையில் காங்கேசன்துறைப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் உத்தரவுக்கமையவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like