காவு வாங்கப்பட்ட தாய், மகனின் உயிர்: மின்சாரம் பாய்ச்சி துடி துடிக்க கொலை

தமிழகத்தில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி தாய் மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் அருகில் உள்ள கொங்கராயனூர் என்கிற கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. நிலத்திற்காக அப்பகுதியை சேர்ந்த தலித் பெண் பேபியும், அவரது மகன் எழிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

பேபிக்கு சிறிய அளவில் நிலம் இருந்ததுள்ளது. பேபியின் நிலத்தை சுற்றி வேறொருவரின் நிலம் இருந்திருக்கிறது.

பேபி தன்னுடைய நிலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அந்த நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். நிலத்திற்கான தண்ணீரும் அந்த நிலத்தின் உரிமையாளரை நம்பிதான் இருக்க வேண்டியிருந்ததுள்ளது.

இந்நிலையில், பேபிக்கு நிலத்தை எழுதிக் கொடு என்று பலமுறை மிரட்டில் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், கடந்த 27ம் திகதி இரவு தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள பேபிக்கு அந்த நிலத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்துள்ளார்.

பேபியும் அவரது மகன் எழிலும் தண்ணீரை திறந்துவிட சென்றிருந்தபோது தண்ணீரில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி பேபியும் எழிலும் இறந்து போயுள்ளனர்

பொலிசார் நடத்திய விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. வழக்கு பதிவு செய்த பொலிசார் இரு குற்றவாளிகளில் பாஸ்கர் என்ற நபரை மட்டும் கைது செய்துள்ளனர். பாபு என்பவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

You might also like