வவுனியா இலங்கை வங்கியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு

இலங்கை வங்கியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி வவுனியா மேற்தரக்கிளையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை வங்கியின் முகாமையாளர் கே.சிவஞானசுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் உதிரம் கொடுத்து உதவிடுவொம் என்றதன் அடிப்படையில் தங்கள் குருதியினை வழங்கியிருந்தனர்.

வவுனியா புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ள மேற்தரக் கிழையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like