இன்று தேசிய சைட்டம் எதிர்ப்புத் தினம்: நாடெங்கும் மாபெரும் போராட்டங்கள்!

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (சைட்டம்) எதிரான தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக சைட்டம் விரோதி ஜன பௌர’ இயக்கம் அறிவித்துள்ளது.

நாடெங்கும் தொழில்சார் நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களதுபெற்றோர்கள் ஆகியோர் கறுப்புப்பட்டிகளை அணிந்து இந்தப் போராட்டங்களில்ஈடுபடவுள்ளனர்.

அரச நிறுவன ஊழியர்களும் கறுப்புப்பட்டிகளை அணிந்து தமது எதிர்ப்பைத்தெரிவிப்பதுடன், அந்த நிறுவனங்களின் முன்னால் கறுப்புக்கொடிகள்பறக்கவிடப்படும் எனவும் ஜன பௌர இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வீதிகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும் ஆங்காங்கேபோராட்டங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது எனவும், மருத்துவ,ஆசிரிய, பெற்றோலிய மற்றும் தனியார்துறைகளில் சில மணித்தியாலங்கள் பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை மருத்துவச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே, இன்றைய போராட்டங்களில் நாடெங்குமுள்ள 12 மாணவர் ஒன்றியங்களும், 600 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்,பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்துகொள்வர் என தெரிவித்துள்ளனர்.

You might also like