மலையக மக்களை அவமதித்த ஜேர்மன் தமிழ் இளைஞன்! கைது செய்யுமாறு அமைச்சர் முறைப்பாடு

இந்திய பூர்வீகத்தை கொண்ட மலையக மக்களை அவமதிக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட இலங்கை பூர்வீகம் கொண்ட ஜேர்மன் பிரஜையை கைது செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய்யுமாறு, இராஜாங்க அமைச்சர் வீ.ராதா கிருஷ்ணன் உட்பட மலையக இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது ஜேர்மன் குடியுரிமை பெற்ற நபருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் மலையகத்தின் இந்து மக்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளை அவமதிக்கும் வரையில் தவறான வார்த்தைகளை பிரயோகித்து கருத்து வெளியிட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் உட்பட மலையக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நுவரெலிய மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டயஸிடம் தெரிவித்த பின்னர் ஹட்டர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அந்த நபரை கைது செய்து இந்த நாட்டிற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like