அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்திருப்பதால் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் தோன்றியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சிகளின்படி இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த எரத்தன, கடவிகந்த, தெவிபஹல, குருவிட்ட, அதிரியன்வல, சுடகல, லக்ஷகந்த, கீரகல மற்றும் தந்தெனிய கிராமசேவையாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் எனவும், மழை தொடருமானால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

You might also like