கொழும்பில் பெண் சாரதிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் ஓட்டோக்கார கும்பலில் ஒருவர் சிக்கினார்!

கொழும்பில் வாகனங்களை ஓட்டிவரும் பெண் சாரதிகளை வழிமறித்து அவர்களை மிரட்டிப்பணம் பறிக்கும் ஓட்டோ கும்பலொன்றை மடக்கிப் பிடிக்கும் பணியில் நாரஹேன்பிட்டி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கும்பலால் மிரட்டப்பட்ட பெண்ணொருவர் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்திருக்கும் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டில்,

ஜாவத்தை, காசப்பா வீதியில் கடந்த வாரம் நான் எனது காரை ஓட்டிச்சென்றபோது ஓட்டோவொன்று என்னை வழிமறித்து நிறுத்தியது. அந்த ஓட்டோ சாரதி என்னிடம் வந்து தனது கார் அவரது ஓட்டோவில் மோதியதால் பக்கக் கண்ணாடியொன்று நொறுங்கிப் போனது.

அதற்கான பணத்தைத்தருமாறும் நச்சரித்தார். நான் அவருக்குப் பணம் தராமல் அன்று மாலை எனது வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளச் சொன்னேன். ஆனால், அவர் வரவில்லை.

கடந்த வியாழக்கிழமை கொம்பனி வீதியில் அதே நபர் அதே வேலையைச் செய்தார். நான் அவருக்குத் தெரியாமல் அந்த ஓட்டோ இலக்கத்தை எனது கைப்பேசியில் படமெடுத்துக்கொண்டேன்” என்று அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்தளர். இவர் இதே குற்றத்துக்காக ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும், இதே குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் அவரது சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார் எனவும், இருவரும் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர்கள் எனவும் தெரியவருகின்றது.

You might also like